Posts

Showing posts from August, 2022

இராணுவ வீரன்

துப்பாக்கி தலையணையாய் தோட்டாக்கள்  மழைத்துளியாய் யுத்தம் தோறும் ரத்தம் ரத்தம் வானில் கழுகின் சத்தம் சத்தம் போரில் காயம் லட்சம் லட்சம் வீரம் என்றும் மிச்சம் மிச்சம் நெஞ்சின் உள்ளே வீரக்கனலும் நெஞ்சின் வெளியே வீரத்தழும்பும் நடுக்கம் இன்றி போர்கள் கண்டு வடுக்கள் நூறு நெஞ்சில் உண்டு தேசம் காக்க பாசம் விட்டு போரின் வாசம் சுவாசம் பெற்று போரில் கை கால் சிதைக்கப்பட்டு இறுதிப் போரில் வதைக்கப்பட்டு போரின் பதக்கம் வீடு சேரும் கோடி நெஞ்சில் வீரம் ஏறும் எமனே எதிரே வந்து நின்றும் யுத்தம் தோறும் நின்று கொன்றும் நெஞ்சை நிமிர்த்து வீரம் தோன்றும் சரித்திரம் நாளை உன்னை போற்றும் கோழையாய் வாழ்வதில் அர்த்தமில்லை நான் வீரனாய் மடிவதில் அச்சமில்லை ! - அரவிந்த் பாரதி

கண் தானம்

மனிதா ஓ மனிதா! கனியான உன் கண்கள், மடிந்த பின் மண் சேரா, மிளிர்ந்த உன் விழி மூடி , இருண்ட பிறர் விழி திறப்பாய்! இறந்த பின்னும் இவ்வுலகில், இறவாது கண்டு வாழ்வாய்! இருண்ட வீட்டில் கதிரவனாய் இருளாமல் காத்து நிற்பாய்! மண்ணில் மக்கும் விழிகளே... விண்ணின் நிறத்தைக் காணச் செய்வீரோ ? - அரவிந்த் பாரதி