கண் தானம்


மனிதா ஓ மனிதா!

கனியான உன் கண்கள்,

மடிந்த பின் மண் சேரா,

மிளிர்ந்த உன் விழி மூடி ,

இருண்ட பிறர் விழி திறப்பாய்!

இறந்த பின்னும் இவ்வுலகில்,

இறவாது கண்டு வாழ்வாய்!

இருண்ட வீட்டில் கதிரவனாய்

இருளாமல் காத்து நிற்பாய்!

மண்ணில் மக்கும் விழிகளே...

விண்ணின் நிறத்தைக் காணச் செய்வீரோ ?


- அரவிந்த் பாரதி

Comments

Popular posts from this blog

இராணுவ வீரன்